விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் பேருந்து நிலைய வளாகத்திற்குள் உள்ள சுவர்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்கள் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மரங்களை வளர்த்தல், குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டக்கூடாது, நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது, மழை நீர் சேகரிப்பு, உலக வெப்பமயமாதல், தொழிற்சாலைகளின் பெருக்கம், இயற்கையோடு வாழப் பழகிக்கொள், மஞ்சப்பையின் மகத்துவம் போன்ற விழிப்புணர்வு பற்றிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஓவியங்கள் பார்ப்பதற்காக மட்டும் அல்ல; நம் வாழ்வியல் முறையில் இக்கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என சுவர்களில் ஓவியங்கள் மூலம் பொதுமக்களுக்கு எழுத்து மூலமாகவும் காண்பிக்கப்பட்டது. இத்தகையை ஓவியங்களில் சிறுநீர் கழிப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது போன்ற அநாகரிகச்செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழுப்புரம் நகராட்சி சார்பில் அறிவிப்பும் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.
கண்ணுக்கு விருந்தாக அமையும் இந்த ஓவியங்களை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கலை சார்ந்த ஓவியர்கள் இணைந்து வண்ணமயமான இந்த ஓவியங்களை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:'தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும்...' கிறிஸ்துவ மத போதகர்கள் குறித்த அப்பாவு பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு