ETV Bharat / state

தாய்-மகள் ஏரியில் சடலமாக மீட்பு! - விழுப்புரம் மேல்மலையனூர் ஏரியில் சடலமாக மிதந்த தாய் மற்றும் சேய்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே தாய் மற்றும் சேய் சடலமாக பெரிய ஏரியில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மேல்மலையனூர் ஏரியில் சடலமாக மிதந்த தாய் மற்றும் சேய்!

author img

By

Published : Apr 7, 2022, 2:42 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் 1200 ஏக்கர் பரப்பளவு கொண்டது பெரிய ஏரி. இதில் தற்போது பெருமளவு நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் நேற்று துர்க்கை அம்மன் கோயில் அருகே ஆல மரத்துக்கு அடியில் அழுகிய நிலையில் 35 வயசு மதிப்பு மிக்க தாயும், பச்சிளம் குழந்தை ஒன்றும் தண்ணீரில் கரை ஒதுங்கியது.

இது குறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மேல்மலையனூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையும் தாயும் மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வளத்தி போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் மற்றும் பச்சிளம் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் நீரில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் மேல்மலையனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை... பல் மருத்துவர் சரண்...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.