விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணி பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் காயத்திரி என்பவர், விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் மீது பாலியல் புகார், பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பாஜக தலைமைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் இந்த புகார்மனு குறித்து மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "விழுப்புரம் மாவட்டத்தில் பாஜகவின் வளர்ச்சியை தடுப்பதற்காக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளன.
என்மீது வீண்பழி சுமத்தி, என்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கின்றனர். பணம் பெற்றுக்கொண்டு கட்சி பொறுப்பு வழங்கும் நிலையில் விழுப்புரம் மாவட்ட பாஜக இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்!