ETV Bharat / state

கரோனா: ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு - villupuram corona update

விழுப்புரம்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று வந்த இருவர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

கரோனா
கரோனா
author img

By

Published : Jul 3, 2020, 7:31 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (ஜூலை 01) வரை மாவட்டத்தில் 944 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 02) ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 991ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா சிகிச்சை பெற்றுவந்த ஆற்காடு பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் மற்றும் துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க நபர் ஆகிய இருவர் நேற்று (ஜூலை 02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி முக்தியில் எரியூட்டப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.