விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ( ஜூலை 22 ) ஒரே நாளில் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2,501 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா சிகிச்சை முடிந்து 1,762 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:'சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ட்ரம்பின் மோசமான வெளியுறவுக் கொள்கையை காரணம்'- ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு!