மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாள்தோறும் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், நோய்த்தொற்று பாதித்துள்ள பகுதிகளில் காவல்துறையினர் தடுப்பு கட்டைகளை அமைத்து அப்பகுதியில் வெளிநபர்கள் உள்ளே செல்லாதவாறும் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக ஒலிப்பெருக்கி வாகனத்தின் மூலம் முகக்கவசம் மற்றும் தகுந்த இடைவெளியினை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையின் வாயிலாக நோய் எதிர்ப்பு சத்து மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதையும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அன்றாட தேவைகளான உணவுப்பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்து பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறதா என்பதையும் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் கேட்டறிந்தார்.