விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 4) முன்னாள் சிறப்பு டிஜிபி-யின் ஓட்டுனராக பணியாற்றிய காவலர் ராமராஜன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும் வழக்கு விசாரணைக்கு முன்னாள் டிஜிபி ஆஜரானார். முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆஜராகவில்லை.
இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஏழாம் தேதிக்கு நீதிபதி கோபிநாதன் ஒத்திவைத்தார். பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அலுவலரின் ஓட்டுநர் பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருப்பினும் அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.