ETV Bharat / state

அண்ணாமலையுடன் நெருக்கம்.. அதிமுக நிர்வாகி நீக்கம்.. விழுப்புரத்தில் நடந்தது என்ன? - edappadi palanisamy

விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளி ஏற்பாட்டில் நடந்த 39 ஜோடிகளுக்கு திருமண விழாவில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை அழைத்து வந்ததால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து முரளியை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

author img

By

Published : Jul 6, 2023, 8:52 PM IST

விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் உள்ள ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் பள்ளி சார்பில், 39 ஜோடிகளுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமண நிகழ்ச்சி நேற்று(ஜூலை 05) நடைபெற்றது. ஆனால் இத்திருமண நிகழ்வானது அ.தி.மு.க நிர்வாகியும், விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ள முரளியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் பா.ஜ.கவின் பிரமுகர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். திருமண விழாவில் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இந்த ஜோடிகளின் திருமண நாளை இனிதாக மாற்றியதற்காக முரளி என்கின்ற ரகுராமன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பா.ஜ.க சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமண விழாவை நடத்திய விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை

இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிவிப்பில் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் இடையிலான கருத்து மோதல் ஏற்பட்டு தற்பொழுது சிறிது அமைதியான சூழ்நிலை உருவாகி வரும் நிலையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமண நிகழ்ச்சி நடத்தியதால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி இருப்பது மீண்டும் இரு கட்சிகளிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு என அதிமுகவினர் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இதற்கிடையே அதிமுகவிற்குள் அண்ணாமலை குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடு அமைந்துள்ளதாக மூத்த நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேலும் இந்த விவகாரம் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் விரிசலை அதிகரிக்கச் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது' என்ற தீர்ப்பால் தர்மம் வென்றது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.