விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே வீமாத்தூர் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லாததால் ஊரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய பல கி.மீ. நடந்து வயல்வெளி மற்றும் ஆற்றினை கடந்து செல்லும் அவல நிலை கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
மேலும் மழை பெய்யும் நேரங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அடக்கம் செய்ய முடியாமல், ஊரின் அருகிலேயே அடக்கம் செய்யும் நிலை உள்ளது என இப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகள் காலமாக சுடுகாட்டிற்கு பாதையில்லாமல் சிரமப்படும் தங்கள் பகுதிவாசிகள் மீது அக்கறை செலுத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "தனி தமிழீழம் தான் தமிழ்நாட்டு மக்களின் இறுதி முடிவு" - திருமுருகன் காந்தி