விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கீழ்பாதி என்ற இடத்தில் அரசு அனுமதியின்றி அதிமுக செயலாளருக்குச் சொந்தமான டிராக்டரில் நேற்று முன்தினம் (டிச. 15) செம்மண் கடத்தி வந்துள்ளனர்.
கடத்தல் டிராக்டர் பறிமுதல்
இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர், அனுமதியின்றி செம்மண் கடத்திய டிராக்டரை மடக்கிப் பிடித்தார். அப்போது, ஓட்டுநர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பியோடினார்.
இதனைத் தொடர்ந்து வாகனத்தை ஒலக்கூர் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். ஆனால் வழக்குப்பதிவு செய்யாமல் தாமதித்து வந்துள்ளனர்.
அதிமுக நிர்வாகி மீது வழக்கு
பின்னர் திண்டிவனம் சார் ஆட்சியர் உத்தரவில் கீழ்பாதி கிராம நிர்வாக அலுவலர் பிரபு புகாரின்பேரில் நேற்று (டிச. 16) ஒலக்கூர் காவல் துறையினர் டிராக்டர் உரிமையாளரான ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தயாளன் (54), ஓட்டுநர் ஆகிய இருவர் மீது செம்மண் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க...சர்வதேச கோவிட்-19 நிலவரம்: அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று லட்சம் பாதிப்பு