ETV Bharat / state

அதிமுக தேர்தல் பரப்புரைக்குச் சென்ற வாகனம் விபத்து: கர்ப்பிணி உள்பட 40 பேர் காயம்!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே அதிமுக தேர்தல் பரப்புரைக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி ஒருவர் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

Dindivanam
வாகனம் விபத்து
author img

By

Published : Mar 21, 2021, 11:32 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச்.21) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதேபோல, நேற்று மாலை காந்தி சிலை அருகே அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை ஆதரித்தும், அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதற்காக திண்டிவனம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் ஆட்கள் அழைத்து வரப்பட்டனர்.

அந்த வகையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக மேல்பாக்கம் கிராமத்திலிருந்து டாட்டா ஏசி வாகனத்தில் 40 பேரை அழைத்துக் கொண்டு கல்லூரி சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தில் ஏறி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை திசையில் இறங்கும்போது, டாட்டா வாகனம் பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி உள்பட வாகனத்தில் வந்த 40 பேரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிமுக தேர்தல் பரப்புரைக்குச் சென்ற வாகனம் விபத்து

விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.