தமிழ்நாட்டில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் இன்று (மே 6) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் விசிகவினர் இன்று தங்களது வீடுகளுக்கு முன் இடைவெளிவிட்டு நின்று டாஸ்மாக் கடையை திறக்கும் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மதுபானக் கடைகளுக்கு மதுபானம் அனுப்பும் பணி தீவிரம்!