ETV Bharat / state

‘மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை’ - வைகோ பரப்புரை - vizhupuram

விழுப்புரம்: மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் வைகோ பேசியுள்ளார்.

vaiko
author img

By

Published : Mar 28, 2019, 7:27 PM IST

மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியின் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழுப்புரத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, இந்துத்துவா கூட்டம் மதசார்பின்மைக்கு கொள்ளி வைக்கும் கூட்டம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றை தன்மையை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்த, மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகாவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த, அதானி-அம்பானி கம்பெனிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்த, ஜிஎஸ்டி மூலம் வணிகர்களின் வாழ்க்கையை நாசமாக்கிய மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நிலைமை நாசமாகி விட்டது. 2 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை பெற்றுதர எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக இல்லை. ஊழல் புதைமணலில் எடப்பாடி அரசு சிக்கி தவிக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை” என உரையாற்றினார்.

Intro:விழுப்புரம்: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் இடையிலான தேர்தல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Body:விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழுப்புரத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்.,

'நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் இடையிலான தேர்தல். ஜனநாயகத்தை பாதுகாக்க, மதசார்பின்மையை நிலைநாட்ட, மத உணர்வுகளை மதித்து, அனைவரும் ஒன்றினைந்து வாழும் நிலைபாட்டை உறுதிபடுத்துவது இந்த தேர்தல்.

இந்துத்துவா கூட்டம் மதசார்பின்மைக்கு கொல்லி வைக்கும் கூட்டம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றை தன்மையை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்த, மேகேதாட்டுவில் அணைகட்ட கர்நாடகாவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த, அதானி-அம்பானி கம்பெனிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்த, ஜிஎஸ்டி மூலம் வணிகர்களின் வாழ்க்கையை நாசமாக்கிய மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவார். மதசார்பின்மையை பாதுகாப்போம்.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நிலைமை நாசமாகி விட்டது. 2 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை பெற்றுதர எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக இல்லை. ஊழல் புதைமணலில் எடப்பாடி அரசு சிக்கி தவிக்கிறது.

தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை. பருப்பு கொள்முதலில் ரூ 400 கோடி ஊழல், 2 ஆயிரம் ஆம்னி பஸ்கள் வாங்கியதில் ரூ 300 கோடி ஊழல், உள்ளாட்சி, நெடுஞ்சாலை துறைகளில் ஊழல், குட்கா ஊழல், தலைமை செயலகத்தில் அமலாக்க துறை சோதனை, கொடநாடு கொலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல சிக்கல்களில் தமிழக அரசு சிக்கி தவிக்கிறது.

இந்தியாவில் வேலைவாய்பின்மை அதிகம் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசு மருத்துவமனைகளில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகம் முழுவதும் 15 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது' என்றார்.

Conclusion:தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.