தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த இரு தினங்களாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் செயல்பட்டுவரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் செயல்படும் என்று அறிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பு கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்கும்விதமாக விழுப்புரம் அதிமுக சார்பில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.