விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சென்ற வாரம் 2020ஆம் ஆண்டுக்கான அரவைப் பணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கி வைத்தனர். இதனால் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் விளைந்த கரும்புகளை வெட்டி டிராக்டர், லாரிகள் மூலமாக ஆலைக்கு எடுத்து வந்தனர்.
ஆனால் தொடர்ந்து அரவைப் பணி நடைபெறாததால் கரும்புகள் வண்டியிலே காய்ந்துபோன நிலையில், வெளியூரிலிருந்து வருகைதந்த ஓட்டுநர்களும், விவசாயிகளும் வேதனையில் ஆலைக்கு முன்பு காத்துக்கொண்டிருந்தனர். இதனை அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரவைப் பணியைத் தொடங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: