ETV Bharat / state

நீதிமன்ற உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை கிடைக்குமா? - மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை

விழுப்புரம்: தனக்கு அரசு வேலை வழங்கக்கோரி கண்ணீர் விட்டு அழுது மாற்றுத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைக்கும் நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ulunthuerpettai handicap
ulunthuerpettai handicap job issue
author img

By

Published : Jan 13, 2020, 7:36 AM IST

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட உ.நெமிலி கிராமத்தில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல கிராமங்களில் கிராம உதவியாளர் பணி காலியிடங்களுக்கு ஏழுமலை விண்ணப்பித்து இருந்தும் மாற்றுத்திறனாளியான இவருக்கு வேலை வழங்காமல் மற்றவர்களுக்குப் பணி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏழுமலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதியின் அடிப்படையில் பணி வழங்கலாம் என உத்தரவு கடந்த 2011ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இதுவரையில் பணி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் வளாகத்தில் நடைபெற்ற பா.கிள்ளனூர் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணலில் கலந்து கொண்ட ஏழுமலை நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு அதன் நகல் கொடுத்துள்ளார். இது குறித்து பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் நகலைக் கொடுத்த மாற்றுத்திறனாளி

இந்நிலையில் தனக்கு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கிராம உதவியாளர் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார், ஏழுமலை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கரையான்களிடம் இருந்து மரங்களைக் காக்க பூசப்பட்ட சுண்ணாம்பு

Intro:tn_vpm_02_ulunthuerpettai_handicapped_probalam_vis_tn10026.mp4Body:tn_vpm_02_ulunthuerpettai_handicapped_probalam_vis_tn10026.mp4Conclusion:உளுந்தூர்பேட்டை அருகே நீதிமன்ற உத்தரவு வின்படி அரசு வேலை கிடைக்குமா மாற்றுத்திறனாளி எதிர்பார்ப்பு !!

உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (49). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி மனைவி 3 பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட உ. நெமிலி கிராமத்தில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து பல கிராமங்களில் இருந்து கிராம உதவியாளர் பணி காலியிடங்களுக்கு ஏழுமலை விண்ணப்பித்து இருந்தும் மாற்றுத்திறனாளியான இவருக்கு வேலை வழங்காமல் மற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் ஏழுமலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதி அடிப்படையில் பணி வழங்கலாம் என உத்தரவு கடந்த 2011ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இருந்தும் இதுவரையில் வேலை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் வளாகத்தில் நடைபெற்ற பா.கிள்ளனூர் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணலில் கலந்து கொண்டு ஏழுமலை நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியருக்கு அதன் நகல் கொடுத்துவிட்டேன் காலிப்பணியிடம் அறிவிக்கப்படும் போது இது குறித்து பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் தனக்கு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கிராம உதவியாளர் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர் இதனால் வட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.