விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் , “பிரதமர் மோடி உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறினார். ஆனால், செலுத்தவில்லை. அவர் உலகம் சுற்றும் வாலிபனாக மாறிவிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்கான விமானச் செலவு மட்டும் ரூ.2,500 கோடி. தமிழ்நாட்டுக்கு இதுவரை நான்கு முறை மட்டுமே வந்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு, கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
இந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. தமிழ்நாட்டின் கதாநாயகன் ஸ்டாலின். இந்தியாவின் வில்லன் மோடி. ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் காமெடியன்கள், அன்புமணி அல்லக்கை, மொத்தத்தில் அதிமுக கூட்டணி காமெடி கூட்டணி” என கடுமையாக விமர்சித்துப் பேசினார்.