ETV Bharat / state

விழுப்புரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 28, 2022, 7:59 PM IST

விழுப்புரம் கண்டமங்கலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்ட கொத்தனாரும், உதவியாளரும் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகேவுள்ள கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர், கோண்டூர் புத்துக்கோயில் பகுதியில் தனக்கு உரிய இடத்தில் வியாபாரம் செய்வதற்காக கடை கட்டியுள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இதே இடத்தில் செப்டிக் டேங்கும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்காக விழுப்புரம் அடுத்த பாக்கம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் மற்றும் உதவியாளர் ஐயப்பன் ஆகியோர் வந்தனர். வேலை செய்துகொண்டிருந்தபோது, செப்டிக் டேங்க் உள்ளே உள்ள பலகைகளை அகற்றுவதற்காக மேலே மூடப்பட்ட இரும்பிலான பலகைகளை மணிகண்டன் திறந்துள்ளார்.

இதில் செப்டிக் டேங்க் உள்ள இருந்து வெளிவந்த விஷவாயு தாக்கி மணிகண்டன் மயங்கி செப்டிக் டேங்க் உள்ளேயே விழுந்தார். பின்னர், மணிகண்டனை காணவில்லை என தேடிய ஐயப்பன் செப்டிக் டேங்கிற்குள் எட்டி பார்த்தார். அப்போது, அவரும் விஷவாயு தாக்கி கீழே விழுந்தார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

சம்பவம் குறித்து உடனடியாக கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ரத்தின சபாபதி மற்றும் போலீசார் செப்டிக் டேங்க் இருந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் முற்றிலுமாக உடைத்து அப்புறப்படுத்தி உள்ளே இறந்த நிலையில் இருந்த இரண்டு நபர்களையும் மீட்டு அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியின் காதை வெட்டிய கணவர்.. சென்னையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.