விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள பெரும்பாக்கம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்டிப்படையில் விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவலர்கள் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45) என்பவர், தனது வீட்டின் பின்புறம் இரண்டு மண்பானைகளில் சாராயம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலா 50 லிட்டர் வீதம் மொத்தம் 100 லிட்டர் சாராய ஊறல், 50 லிட்டர் விஷச் சாராயம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்தியதையடுத்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (47) என்பவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது; மூவர் தலை மறைவு!