ETV Bharat / state

ஏம்மா நீ எஸ்சி தானே? விவாதத்திற்குள்ளாகும் உயர்கல்வித்துறை அமைச்சரின் பேச்சு.. - மனம்பூண்டி கிராம ஒன்றிய செயலாளர்

விழுப்புரம் அருகே புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா மேடையில் சாதி குறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 20, 2022, 4:26 PM IST

விழுப்புரம்: தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி அரசு விழா மேடையில் ஒன்றிய சேர்மனின் சாதியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கண்டாச்சிபுரத்தை அடுத்த மனம்பூண்டி கிராமத்தில் நேற்று (செப்.19) புதிய நியாய விலைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திமுக அரசின் சாதனைகளையும், செயல்பாடுகளையும், திராவிட மாடல் ஆட்சியை பற்றியும் விளக்கி பேசினார்.

அப்போது அவர், "ஒரு காலத்தில் மகளிர் என்றாலே ஒடுக்கப்பட்டவர்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மகளிருக்கு படிப்பு உட்பட அனைத்திலும் இடமளிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைத்தான் சொல்லி இருக்கிறார். தந்தை பெரியாரும் இதைத்தான் சொன்னார்.

ஆணும் பெண்ணும் சமம். இங்கே பாருங்கள்! இந்த ஊருக்கு பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த ஒரு மகளிர் ஒன்றிய சேர்மனாகி இருக்கிறார் என்றால் அதுதான் திராவிட மாடல். ஊராட்சி, ஒன்றிய தலைவர் பொறுப்புகள் எல்லாவற்றிலும் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். ஒன்றிய சேர்மனை சாதி பிரிவை குறிப்பிட்டு மேடையிலேயே அதனை உறுதி செய்து கொண்டார் பொன்முடி.

அரசு விழாவில் சாதி குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி

இதையும் படிங்க: திமுகவின் உண்மை முகம் தெரிந்து விட்டது... இனி எந்த மாடல் பேசினாலும் மக்கள் நம்பபோவதில்லை... ஜி.கே. வாசன்...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.