விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு வேளாண் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாடுர், கீரனூர், தச்சூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வேளாண் துறை இயக்குநர் பேசுகையில், தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் ' ஆனைக்கொம்பன் ஈ ' என்ற நோய் நெற்பயிர்களைத் தாக்கி வருவதாகவும், வேளாண் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து ஆலோசனை வழங்கி, அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஆண்டு சம்பா பருவத்திற்கு ஆறு லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டு போதுமான உரம் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறுதானிய பயிர்கள் ஒன்றரை லட்சம் ஹெக்டர் கூடுதல் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது எனப் பெருமிதம் தெரிவித்தார். மேலும் மக்காச்சோளம் பயிரில் அரசின் தீவிர முயற்சியால் மருந்துகள் தெளிக்கப்பட்டு படைப்புழு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படியுங்க: குடிநீர் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகும் - நீதிபதிகள் கருத்து!