நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் நேற்று(ஆகஸ்ட் 1)பேருந்துகளை நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது R12 என்ற அரசு பேருந்து சேலத்தில் இருந்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது.
அதில் பயணம் செய்த சித்ரா என்ற பெண் மகளிருக்கு இலவசம் என்ற பயணச்சீட்டை பெற்றுள்ளார். ஆனால் "மகளிருக்கு இலவசம்" என்ற பயணச்சீட்டை சித்ரா தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என பரிசோதகர் வற்புறுத்தி உள்ளார். அந்த பெண் செய்வது அறியாமல் தவித்ததை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பயணச்சீட்டு தொலைத்திருந்தாலும் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச தானே என பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து பரிசோதகர் அங்கிருந்து சென்றுவிட்டார். பயணச்சீட்டு தொலைத்த பெண்ணிடம் 100 ரூபாய் அபராதம் கட்டச் சொல்லி வற்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:காதல் மனைவியை கத்தியால் குத்திய கணவன் - ஒரு மாதத்திற்கு பின் ஆந்திராவில் சடலம் மீட்பு