ETV Bharat / state

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை: லாட்டரி வியாபாரிகள் 3 பேர் கைது! - லாட்டரி சீட்டுகள்

விழுப்புரம்: நான்கு மாவட்டங்களில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த தொழிலதிபர் உள்ளிட்ட லாட்டரி வியாபாரிகள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை
author img

By

Published : Jan 9, 2021, 1:33 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவந்த 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் பையூர் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கோபி, அவரின் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து ரஜினி லாட்டரி ஏஜென்சி என்ற பெயரில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் பல ஏஜெண்டுகளை நியமனம் செய்து, குறிப்பாக கிராமப்புற மக்களை குறிவைத்து சட்டவிரோதமாக லாட்டரி தொழில் செய்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தொழிலதிபர் சடகோபன், அவரது கூட்டாளிகள் வெங்கடேசன், யோவன் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை காவல் துறையினர் நேற்று (ஜன.8) கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மூன்று மடிக்கணினிகள், ஏழு செல்போன், சீட்டு அடிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான லாட்டரி வியாபாரி கோபியை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள்

லாட்டரி எண்களை வாட்ஸ்அப், மெயில் மூலம் அனுப்பி அதை பிரிண்ட் எடுத்து மற்ற மாவட்டங்களில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தாலுகா காவல் நிலைய காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற ஆறு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.