விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், சுப்ரமணி, வெங்கடேசன். இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் முயல் வேட்டையில் ஈடுபட்டபொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மின்வேளியில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நிலத்தின் உரிமையாளர் சடகோபன் என்பவரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா, திண்டிவனம் காவல் நிலையத்தில் உரிமையாளர் சடகோபனிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க:சத்தியமங்கலம் புலிகள் காப்பக விலங்குகள் குறித்த ஆவணப்படம் வெளியீடு