விழுப்புரம் செஞ்சி அருகேயுள்ள ஏதாநெமிலி என்ற கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊருக்கு பொதுவான மந்தைவெளி பகுதியில் கடந்த 15ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி அக்கட்சியினர் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சுவரொட்டியை கிழித்து எறிந்துள்ளனர்.
இதேபோல் ஆகஸ்ட் 17ஆம் தேதி திருமாவளவனின் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க விசிகவினர் முற்பட்டப்போது, அதையும் தடுத்து நிறுத்தி மற்றொரு தரப்பினர் பேனரை கிழித்ததுடன், அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
விழுப்புரத்தில் திருமா பேனர் கிழிப்பு!
விழுப்புரம்: செஞ்சி அருகே திருமாவளவன் பேனரை கிழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விசிகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் செஞ்சி அருகேயுள்ள ஏதாநெமிலி என்ற கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊருக்கு பொதுவான மந்தைவெளி பகுதியில் கடந்த 15ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி அக்கட்சியினர் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சுவரொட்டியை கிழித்து எறிந்துள்ளனர்.
இதேபோல் ஆகஸ்ட் 17ஆம் தேதி திருமாவளவனின் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க விசிகவினர் முற்பட்டப்போது, அதையும் தடுத்து நிறுத்தி மற்றொரு தரப்பினர் பேனரை கிழித்ததுடன், அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Body:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஏதாநெமிலி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வன்னியர் பிரிவை சேர்ந்த குடும்பங்களும், 70க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊருக்கு பொதுவான மந்தைவெளி பகுதியில் கடந்த 15ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் சுவரொட்டியை அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஒட்டியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சுவரொட்டியை கிழித்து எரிந்துள்ளனர்.
இதேபோல் ஆகஸ்ட் 17ஆம் தேதி திருமாவளவனின் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க விசிகவினர் முற்பட்டப்போது, அதையும் தடுத்து நிறுத்திய மற்றொரு தரப்பினர் பேனரை கிழித்ததுடன், அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Conclusion:இதைத்தொடர்ந்து பாதிக்கபட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, பேனரை கிழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் மனு அளித்தனர்.