விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் கீழக்கொண்டூர். இந்த கிராமத்தில் நாராயணன் என்பவர் இன்று காலை வழக்கம் போல தமது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவர் அவரின் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச மின் இனைப்பை கொடுக்குமாரு நாராயணனிடம் கூறியுள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கலியபெருமாளின் இரு மகன்கள் ராஜீவ்காந்தி, மனோகரன் ஆகியோர் நாராயணனை தள்ளிவிட்டு அவரது நெற்றிப்பொட்டில் செங்கல்லால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மயக்கமான நாராயணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது நாராயணன் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இது தொடர்பாக அரகண்டநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து கலியபெருமாள் மற்றும் அவரது மகன் ராஜீவ்காந்தி ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய மனோகரனை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சிறு வாய் தகராறில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
இதையும் படியுங்க: பெண் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!