கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வாகன ஓட்டிகள் 50க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரண் குரலா, கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தனியார் பள்ளி ஒன்றில் தொடங்கிய இப்பேரணி கள்ளக்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழியாக நான்கு முனை சந்திப்பில் முடிவுற்றது.
இதையும் படிங்க: சாலை பாதுகாப்பு வார பேரணி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு...