ETV Bharat / state

திண்டிவனம் அருகே 232 மதுபாட்டில்கள் திருட்டு!

author img

By

Published : Jun 22, 2021, 6:20 PM IST

விழுப்புரம்: திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து நான்கு லட்சம் மதிப்பிலான 232 மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே 232 மதுபாட்டில்கள் திருட்டு

திண்டிவனம் அடுத்த ஈச்சேரி சாலையோரம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவரும், அவருக்கு உதவியாளராக குமார் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று (ஜூன்.21) விற்பனை முடித்துவிட்டு மாலை இவர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் இன்று (ஜூன்.22) காலை அப்பகுதி டாஸ்மாக் கடை உடைக்கப்பட்டுள்ளதாக ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள்

தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற ஒலக்கூர் காவல் துறையினர், காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கடையை பார்வையிட்டு விசாரணை செய்தனர். இதில் 55 அட்டைப் பெட்டிகளில் இருந்த 232 மதுபாட்டில்கள் திருடு போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் நான்கு லட்சம் என காவலர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஒலக்கூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக அதே கடையில் சுவரைத் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'திமிங்கலத்தின் ரூ.2 கோடி மதிப்பிலான உமிழ்நீர் கடத்தல்: 6 பேர் கைது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.