விழுப்புரம் மகாராஜபுரம் நகர்புற பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். மாதந்தோறும் 50க்கும் மேற்பட்ட பிரசவங்கள் இங்கு நடைபெறுகிறது.
இங்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு ரூ 40 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் புதியதாக கட்டப்பட்ட கழிவறைகள் அரசு இடத்தில் கட்டாமல் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் கட்டியது தெரியவந்துள்ளது.
இதனால் கட்டுமான பணிகள் சில காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆகையால் சில கட்டிடங்கள் பயன்பாடின்றி இருந்து வருவதை அறிந்த சமூக விரோதிகள் சிலர், மது அருந்தி, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள கட்டட பணிகளை மீண்டும் துரிதப்படுத்தி கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எழும்பூர் ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டு - 2 பேர் கைது