ETV Bharat / state

விழுப்புரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி அடுத்தடுத்து ஏலம்!! - villupuram district news

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ. 13 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

the-post-of-panchayat-leader-has-been-auctioned-for-rs-14-lakh
விழுப்புரத்தில் அடுத்தடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்
author img

By

Published : Sep 19, 2021, 12:44 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிடப் போவதாகக் கூறப்படுகிறது.

இதில், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ? அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம், அக்கிராம மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள ஆலமரத்தடியில் நடைபெற்றது.

விழுப்புரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி அடுத்தடுத்து ஏலம்!

ஊர் முக்கியஸ்தர்கள் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஏலத்தை தொடங்கினர். காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் ஒரு மணி வரை ஏலம் நடைபெற்றது. இதன் நிறைவாக, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கு ரூ.14 லட்சத்திற்கு ஏலம் முடிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து, முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று அக்கிராம இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏலம் நடைபெற்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பொன்னங்குப்பம் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ரூ. 13 லட்சத்து ஏலம் விட்ட கிராம மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.