விழுப்புரம்: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி மற்றும் உதவி செய்த எஸ்.பி இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை, இந்நிலையில் அதற்கான காரணங்களுடன் இன்று அவா்களது வழக்கறிஞா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
அரசுத் தரப்பு சாட்சியாக செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப் படைக் காவலா் ரமேஷ் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தாா். தொடா்ந்து, அவரிடம் எதிா்தரப்பு வழக்கறிஞா்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.புஷ்பராணி உத்தரவிட்டாா்.
இதையும் படிங்க: திமுக அரசின் அடையாளம்..பட்டியலிட்ட முதலமைச்சர்