ETV Bharat / state

ஓராண்டாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது! - 10-year-old-girl abuse case

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையம்
author img

By

Published : Sep 7, 2019, 3:14 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக ரங்கராஜ் என்பவர் பணியாற்றிவந்தார். இந்நிலையில் இவர் அதேப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

Teacher arrested in pocso
ஆசிரியர் ரங்கராஜ்

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆசிரியர் ரங்கராஜை அழைத்து விசாரணை செய்தனர்.

அதில் கடந்த ஒரு வருடமாக பள்ளியின் அருகில் உள்ள ஆசிரியரின் வீட்டிற்கு சிறுமியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், மேலும் இது குறித்து வெளியே சொன்னால் அடித்துக்கொன்று விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டி வந்தது தெரிவந்துள்ளது. இதனையடுத்து சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் ரங்கராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Intro:tn_vpm_01_pocso_teacher_aquest_arrest_vis_tn10026Body:tn_vpm_01_pocso_teacher_aquest_arrest_vis_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் ஆதிதிருவரங்கம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணி புரிபவர் ரங்கராஜ். இவர் இன்று அதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனை அடுத்து தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து உள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார், பள்ளி ஆசிரியர் ரங்கராஜை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கடந்த ஒரு வருடகாலமாக பள்ளியின் அருகில் உள்ள ஆசிரியரின் வீட்டிற்கு மாணவியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்து உள்ளார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் அடித்து கொன்று விடுவேன் என மிரட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலிசார் ஆசிரியர் ரங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.