தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ராஜா, செஞ்சி அருகேயுள்ள வடதரம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 226 கடைகளை மூடிய டாஸ்மாக் ஊழியர் கூட்டமைப்பினர், விழுப்புரம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.