விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துப் பேசிவருகின்றனர்.
முன்னதாக, கடந்த 22ஆம் தேதி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் 15 நிமிடங்கள் ரகசியமாகச் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றனர். இந்த ரகசிய சந்திப்பு குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில் இன்று அமைச்சர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிவருகின்றனர்.
இதில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு, சட்டப்பேரவைத் தேர்தல், அதிமுக-பாமக கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.