ETV Bharat / state

’5 முறை ஆண்டவர்களுக்கு நிதி நிலைமை கூட தெரியவில்லை’ - சி.வி. சண்முகம் சாடல்

author img

By

Published : Nov 3, 2019, 11:53 PM IST

விழுப்புரம்: தமிழ்நாட்டில் ஐந்து முறை ஆட்சி செய்தவர்களுக்கு மாநிலத்தின் நிதி நிலைமை பற்றிய விவரம் கூட தெரியவில்லை என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சாடியுள்ளார்.

Tamilnadu law minister speech about thalikku thangam scheme

திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் அரசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு 2,320 பயனாளிகளுக்கு 14 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், நிதி உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய சி.வி. சண்முகம்

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர எண்ணற்ற திட்டங்களைத் தீட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நகரத்தில் உள்ளதுபோல், கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கினார். உயர் கல்வியில் தமிழ்நாடு இன்று சிறந்து விளங்க காரணமாய் இருந்தவர் ஜெயலலிதா. இதேபோல் திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவியும் வழங்கிய ஒரே அரசு ஜெயலலிதாவின் அரசுதான்.

ஆனால் தமிழ்நாட்டில் ஐந்து முறை ஆட்சி செய்தவர்கள், மாநிலத்தின் நிதி நிலைமை பற்றி கொஞ்சம் கூட அறியாமல் பொய் வாக்குறுதிகளைக் கூறி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக அரசின் இலவச திட்டங்களை பயன்படுத்தி மக்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும்” என்றார்.

Intro:விழுப்புரம்: தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர்களுக்கு மாநிலத்தின் நிதி நிலைமை பற்றிய விவரம் கூட தெரியவில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.Body:திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தை அடுத்த அரசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு 2,320 பயனாளிகளுக்கு ரூபாய் 14 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்.,

"பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர எண்ணற்ற திட்டங்களை தீட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

நகரத்தில் உள்ளது போல், கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கல்வித்தரம் உயர இலவச மடிக் கணினிகளையும் வழங்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. உயர் கல்வியில் தமிழகம் இன்று சிறந்து விளங்க காரணமாய் இருந்தவர் ஜெயலலிதா.

இதேபோல் திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கிய ஒரே அரசு ஜெயலலிதாவின் அரசு.

ஆனால் தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தார்கள் தமிழகத்தின் நிதி நிலைமை பற்றி கொஞ்சம் கூட அறியாமல் பொய் வாக்குறுதிகளை கோரி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக அரசின் இலவச திட்டங்களை தமிழக மக்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.Conclusion:இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு மற்றும் மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.