உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், விழுப்புரம் அதிமுக தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான இரா. குமரகுருவின் மகள் இலக்கியா, சேலம் உடையான்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் - சுபா தம்பதியரின் மகன் ராம்பிரசாத் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி இன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு மூன்று முறையும் வெற்றிப் பெற்றவர் குமரகுரு என்றும், அவரது இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்ததில் மிகவும் பெருமைப்படுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: சுற்றுப்புறத்தை பாதுகாத்தல் குறித்து கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி!