தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடுபிடித்துவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 29) நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ளார். புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் காலை 8.30 மணிக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பரப்புரையைத் தொடங்கவுள்ளார்.
இன்று தொடங்கும் இந்தப் பரப்புரையானது 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்ற தலைப்பில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: டெண்டர் தகவலை தர மறுத்த சென்னை மாநகராட்சி அலுவலருக்கு அபராதம்