ETV Bharat / state

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருக்கும் எல்லீஸ் தடுப்பணை புதுப்பிக்கப்படும் - அமைச்சர் பொன்முடி - ஏனாதிமங்கலம்

விரைவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ் தடுப்பணை புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி உறுதியளித்துள்ளார்.

புதிய அணை கட்டப்படும்
புதிய அணை கட்டப்படும்
author img

By

Published : Nov 7, 2021, 5:58 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(நவ.07) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் அங்கு இருக்கும் எல்லீஸ் தடுப்பணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், 'கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 1950ஆம் ஆண்டு கட்டப்பட்ட எல்லீஸ் தடுப்பணை பழுதடைந்து, அணையின் ஒரு பக்கத்திலிருந்து நீர் வெளியேறி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு, நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

எல்லீஸ் தடுப்பணையைப் பார்வையிட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

ரூ.51 கோடி செலவில் அணையை முழுவதுமாக புதுப்பிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மிக விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வளவனூர் பகுதியில் கடந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இடிந்து விழுந்த தடுப்பணையையும் ரூ.15 கோடி செலவில் சீரமைக்கப்படும்' என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் கனமழை: குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் மக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.