விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சுதாகர் நகர் பகுதியில் கடந்த ஒரு வருடமாகவே, திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த திருட்டில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் அப்பகுதியில் வசித்துவரும் ஆசிரியர் இளங்கோ என்பவர் இறங்கினார். இதனையொட்டொ அவர், தனது வீட்டை சுற்றிலும் ஆறு இடங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தினார்.
இந்நிலையில் நேற்று பக்கத்து வீட்டில் இருக்கிற இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோல் திருடப்பட்டிருந்ததை அறிந்த இளங்கோ, தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்து பார்த்தார்.
அப்போது திருட வந்த இளைஞர் தொடர்ந்து இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களையும் பெட்ரோலையும் திருடுவதோடு அல்லாமல் மாடி பகுதிக்குச் சென்று அங்குள்ள ஓய்வறையில் உள்ள ஊஞ்சலில் சிறிது நேரம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோ, இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே இந்த கொள்ளையர்களை பிடிக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படியுங்க: