ETV Bharat / state

தனியார் விடுதியில் தூக்கிட்டு இறந்த  இளைஞர் - கடிதம் மூலம் இறுதி வாக்குமூலம்! - தனியார் விடுதி

விழுப்புரம் : திண்டிவனத்தில் உள்ள தனியார் விடுதியில் 35 வயது மதிக்கதக்க ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட விஜயபாஸ்கர்
author img

By

Published : Sep 24, 2019, 9:47 AM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது தனியார் தங்கும் விடுதி. இங்கு கவரை கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுள்ள விஜயபாஸ்கர் கடந்த 19ஆம் தேதியன்று 305ஆவது எண் கொண்ட அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்றையிலிருந்து வெளியே வராததால் விடுதியின் மேலாளர் பாலசுப்பிரமணி என்பவர் விஜயபாஸ்கர் தங்கியிருந்த அறையை தட்டிப்பார்த்துள்ளார். ஆனால், வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட விஜயபாஸ்கர்

இந்நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது விஜயபாஸ்கர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே விடுதி மேலாளர் திண்டிவனம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்னர்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காவல் துறையினரின் சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தன் இறப்புக்குக் காரணம் என ஐந்து பெயரை எழுதி வைத்துள்ளார். அதில், அவர்கள் ஒருநாள் முழுவதும் தன்னை அடித்ததாகவும், தனக்கு கடன் பிரச்னை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : மதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் அருகில் பட்டப்பகலில் பெண் தீக்குளித்து தற்கொலை

திண்டிவனத்தில் உள்ள தனியார் விடுதியில் 35வயது மதிக்கதக்கவர் தூக்கிட்டு தற்கொலை. போலிசார் விசாரணை.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது என்.பி.சி தனியார் தங்கும் விடுதி. இங்கு தினந்தோறும் வெளியூர்களில் இருந்து பணி நிமித்தமாக திண்டிவனம் வரும் பலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி பணியை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள என்.பி.சி தனியார் விடுதியில் கடந்த 19ஆம் தேதி முதல் 305 - வது எண் கொண்ட அறையை வாடகைக்கு
எடுத்து தங்கியிருந்த செஞ்சி அடுத்த கவரை கிராமத்தினை சேர்ந்த 35 வயதுமதிக்கதக்க வாலிபர் விஜயபாஸ்கர் என்பவர் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் போலி சாரால் மீட்கப்பட்டு உள்ளார்.

இவர் தங்கியுள்ள அறையில் இருந்து நேற்றையிலிருந்து வெளியே வராததினால் விடுதியின் மேலாளர் பாலசுப்பிரமணி என்பவர் விஜயபாஸ்கர் தங்கியிருந்த அறையை  
தட்டிப்பார்த்துள்ளார்.

ஆனால், வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இந்நிலையில் தங்கும் விடுதியில் அறை எண் 305 ஜன்னலை நீக்கி திறந்து பார்த்த போது  விஜயபாஸ்கர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

உடனே விடுதி மானேஜர் பாலசுப்பிரமணி திண்டிவனம் காவல்நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த திண்டிவனம் போலிசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதியில் இருந்த விஜயபாஸ்கர் தன் இறப்புக்கு காரணம் என சிலரது பெயரை எழுதி கடிதமாக வைத்துள்ளதாகவும்,
இவர் தனது தாய்மகன் மகளான ஷகிலா என்பவரை திருமணம்செய்தும் குழந்தை இல்லாததால் இரண்டாவதாக புதுச்சேரியை சேர்ந்த சரண்யா என்பவரை திருமணம் செய்து பத்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்கின்ற  மகனும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

இறந்த விஜயபாஸ்கர் ஏசி மெக்கானிக்காக மகாபலிபுரத்தில் பணி செய்து வந்துள்ளார்.

இவருக்கு கடன் பிரச்னை மற்றும குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தை கைப்பற்றி
 விஜயபாஸ்கர் தற்கொலை குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தனியார் விடுதி ஒன்றில் வாலிபர் தூக்கிட்டு தற்க்கொலை செய்துக்கொண்ட இச்சம்பவம் விடுதியில் தங்கியுள்ளவர்களையும் அதில் பணிபுரிபவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.