விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை இரண்டில் விவசாயிகளுக்காக இந்தாண்டு சிறப்பு அரவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 45 நாட்கள் நடக்கும் இந்த அரவை பருவத்தில் 80 ஆயிரம் டன் அளவிலான கரும்புகளை அரைக்க ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம், சின்ன சேலம், சங்கராபுரம் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டிலேயே பல லட்சம் ஏக்கரில் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுவதும், கொள்முதல் செய்யப்படுவதும் இந்த ஆலையை நம்பித்தான்.
இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, சர்க்கரை ஆலை நிர்வாகத் தலைவர் ராஜசேகர், முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு அரவையைத் தொடங்கிவைத்தனர்.