ETV Bharat / state

உயர்கல்விக்காக போராடும் மாணவி : பழங்குடியின சான்றிதழ் வழங்க ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை

விழுப்புரம் : பரங்கனி பழங்குடி இருளர் மாணவிக்கு சாதி சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயர்கல்விக்காக போராடும் மாணவி : பழங்குடி  சான்றிதழ் வழங்க வேண்டுமென  ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை

author img

By

Published : Aug 14, 2020, 2:55 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தி.பரங்கனி கிராமத்தைச் சார்ந்த பழங்குடி இருளர் மாணவி தனலட்சுமிக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென்று விண்ணப்பித்து பல நாள்களாக போராடி வருகிறார். அவர் பட்டப்படிப்பில் சேர்வதற்கு சாதி சான்றிதழ் தேவையாக உள்ளது. இது குறித்து அவர் அனுப்பிய கோரிக்கை மனுவை நான் மாவட்ட ஆட்சியருக்கு முன்பே பரிந்துரை செய்து அனுப்பியிருந்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணவி தனலட்சுமிக்கு பழங்குடி இருளர் இன சாதி சான்றிதழ் வழங்கக் கூடாது என்று அந்த கிராமத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி எதிர்ப்பு தெரிவிக்க அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஒருவேளை மாணவி தனலட்சுமியின் கோரிக்கையில் ஐயம் இருந்தால் அதை அங்கு இருளர் குடியிருப்பில் உள்ள மற்றவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவருக்கு சாதி சான்றிதழ் கொடுக்கக் கூடாது என மறுப்பதற்கு அவர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால், அவர்கள் எல்லோரும் தனலட்சுமிக்கு சாதி சான்றிதழ் கொடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவி தனலட்சுமி பழங்குடி இருளர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட ஆதாரங்களை அலுவலர்களிடம் அவரது கோரிக்கை மனுவோடு இணைத்து வழங்கியுள்ளார். மாணவியின் தந்தைக்கு இருளர்களுக்கு ஒதுக்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா அரசாங்கத்தால் 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இப்படி பல ஆதாரங்கள் இருந்தும் அவருக்கு சாதி சான்றிதழ் கொடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல என்பதை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினேன். பழங்குடி மக்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாவட்ட நிர்வாகம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். சாதி சான்றிதழ் வழங்க தாமதிப்பதால் அவரது உயர்கல்வி பாழாகி விடக்கூடாது. இதை அலுவலர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.