திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு வரும் அவர், திமுக தலைவராக மூன்றாவது ஆண்டில் இன்று (ஆகஸ்ட் 28) அடியெடுத்து வைத்துள்ளார்.
இதனையொட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. திமுக எம்எல்ஏ பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதையும் படிங்க: அருமையான நண்பனை இழந்து தவிக்கிறேன் - நாராயணசாமி இரங்கல்