விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26-ஆம் தேதி வரஉள்ளார். அப்போது முதலமைச்சர் புதிய ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழா, பல்வேறு துறைகளின் கீழ் ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்டவற்றில் பங்கேற்க உள்ளார்.
இதனை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குரலா மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயசிங், காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.