இதுதொடர்பாக விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தைப்பூச சக்தி மாலை இருமுடி பெருவிழா டிசம்பர் 18ஆம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டும், அடுத்தாண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மூலமாக பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 17ஆம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வரை தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
குறிப்பாக சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், பெங்களூரூ, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர் போன்ற முக்கியமான இடங்களில் இருந்து தினசரி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் குழு பயணிகள் செல்ல பேருந்து வசதி தேவைப்பட்டால் அந்தந்த மாவட்ட அலுவலரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை பெற்று சிரமமின்றி மேல்மருவத்தூர் திருக்கோயிலுக்கு சென்று வர சிறப்பான வசதிகளை ஏற்பாடு செய்ய உள்ளோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.