விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகேயுள்ள கண்ணாரம்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி அய்யனார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஆகஸ்ட் 30) விழுப்புரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இடி, மின்னல் தாக்கியதில் அய்யனாருக்கு சொந்தமான 21 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.