விழுப்புரம் அருகேயுள்ள சின்னக்குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (எ) ராஜ் (47). இவர் சாலைஅகரம் பகுதியில், ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கொய்யா விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) ராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக வளவனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செந்தில் (எ) ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!