இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. அதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரேநாளில் விழுப்புரம் காமராஜர் தெரு, சுப்பிரமணிய பாரதியார் தெரு, கே.கே. சாலை, சிங்காரத்தோப்பு, மந்தகரை ஆகிய பகுதிகளில் வசித்துவரும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 1,765 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதனிடையே, கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவால் 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலருக்கு கரோனா: காவல் நிலையமாக மாறிய வாகனம்!