ETV Bharat / state

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? எச். ராஜாவுக்கு சீமான் கேள்வி .

என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

seeman criticize h raja  seeman  h raja  villupuram news  villupuram latest news  naam tamilar  எச் ராஜா  சீமான்  வேட்பாளர் அறிமுக கூட்டம்  நாம் தமிழர் கட்சி  எச் ராஜாவை விமர்சித்த சீமான்
சீமான்
author img

By

Published : Oct 1, 2021, 9:46 AM IST

விழுப்புரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் விழுப்புரம் கோலியனூரியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளரை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள். அரசியல் விளம்பரத்திற்காக என்னைப் பற்றியும், நாம் தமிழர் கட்சியையும், எச். ராஜா, தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

அவரால் முடிந்தால் என்னோடு ஒரே மேடையில் பேசத் தயாரா கேட்டுச் சொல்லுங்கள். நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்தால் மட்டுமே விவசாயம் வளர்ந்து நாடு வளம் பெறும். விவசாயம் செய்யாத நாட்டில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் எதற்கு?

எச் ராஜாவை விமர்சித்த சீமான்

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். கொள்கைப் பிடிப்பும், எந்தவொரு சமரசமும், இல்லாமல் தொடர்ந்து வரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தேர்தலில் போட்டியிட்டு சீட்டுக்களை பெறுவது எங்கள் நோக்கம் அல்ல. இந்த நாட்டை கைப்பற்றுவது எங்கள் நோக்கம்” என்றார்.

இதையும் படிங்க: வருமான வரித்துறை அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்டடம் திறப்பு விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.