விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மணல் கொள்ளையைத் தடுக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் நேற்றிரவு திருகோவிலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த மூன்று லாரிகளை வழிமறித்து சோதனை செய்த போது, அதில் சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. லாரிகளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.